தமிழக பாஜக தலைவராக தமிழிசை கடந்த 2014 ஆகஸ்ட் முதல் இருந்து வருகிறார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் நிலை சற்று பரிதாபமாகதான் உள்ளது.தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக 4 தொகுதிகளில் போட்டியிட்டது.ஆனால் நான்கு தொகுதிகளிலும் பாஜக தோல்வியையே சந்தித்தது.அதிலும் பாஜக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களை எடுத்துக்கொண்டால் தூத்துக்குடியில் தமிழிசை,கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன்,சிவகங்கையில் ஹெச்.ராஜா ,கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்,ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரும் பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்கள் தான்.
எனவே தோல்விக்கு காரணம் கேட்டு பாஜக மேலிடமும் தமிழக பாஜ தலைவரை மாற்றவும் முடிவு செய்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழக பாஜவில் அதிரடி மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.தோல்வியின் காரணமாக தற்போது தமிழக பாஜக தலைவரான தமிழிசை பதிவியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…