துணிச்சல் இருந்தால் பிரதமர் முன் இதனை பேசுவதற்கு முதல்வர் தயாரா? – முக ஸ்டாலின் சவால்

Default Image

ஆட்சி முடியவுள்ளதால், விவசாயியாக நடிப்பவர் பழனிசாமி தான், நான் இல்லை என்று முக ஸ்டாலின் மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இரண்டாவது நாளான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் ஸ்டாலினுடன் செல்பி எடுக்க முயன்ற போது, அவரது செல்போனை வாங்கி தானே செல்பி எடுத்து கொடுத்தார் முக ஸ்டாலின்.

பின்னர் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், மின் கொள்முதல் ஊழல், வாக்கிடாக்கி ஊழல், குட்கா, குவாரி ஊழல் என அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். எமர்ஜென்சியை எதிர்த்ததால் 23 வயதில் சிறைக்கு சென்றதையும், மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்ததையும் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

இதையடுத்து முதல்வர் பழனிசாமி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது, ஊர் பார்த்து சிரிக்கிற முதல்வர் பழனிசாமி, என்னை பார்த்து நான் நடிக்கிறதாக கூறி வருகிறார். நடிக்க வேண்டிய அவசியம் இந்த ஸ்டாலினுக்கு இல்லை என்றும் தேவையில்லை. ஆட்சி முடியவுள்ளதால், விவசாயியாக நடிப்பவர் பழனிசாமி தான், நான் இல்லை. நான் உழைத்து, தியாகம் செய்து அரசியலில் முன்னுக்கு வந்தேன் என்பது நாடு மக்களுக்கு தெரியும்.

முதல்வர் கூறுகிறார், என்னை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இதை டெல்லி சென்றிருந்த போது சொல்லிருந்தால் பாராட்டலாம். சரி, இப்போ வரும் 14-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அப்போது, துணிச்சல் இருந்தால் பிரதமர் மோடி முன்னாள் மேடையில் பேசுவதற்கு முதல்வர் பழனிசாமி தயாராக இருக்கிறாரா என முக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்