பண்ணை விவசாய சட்டம் தவறா? சிஏஏ தவறா? நீட் தவறா? எங்கே தவறு? – அண்ணாமலை
திமுக அரசியல் நாடகம் அம்பலத்தில். இன்று தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்.
தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக அரசியல் நாடகம் அம்பலத்தில். இன்று தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்! இன்னொரு நாள், இன்னொரு பொய். அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் பொய்கள் மற்றும் புரட்டு! பண்ணை விவசாய சட்டம் தவறா? சிஏஏ தவறா? நீட் தவறா? எங்கே தவறு?’ என பதிவிட்டுள்ளார்.
.@arivalayam அரசியல் நாடகம் அம்பலத்தில்.
இன்று தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்!இன்னொரு நாள், இன்னொரு பொய்.
அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் பொய்கள் மற்றும் புரட்டு!
பண்ணை விவசாய சட்டம் தவறா?
சிஏஏ தவறா?
நீட் தவறா?
எங்கே தவறு?— K.Annamalai (@annamalai_k) September 13, 2021