தமிழகம்:முல்லைப் பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியதற்கு கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.ஆனால்,அதன்பிறகு மரம் வெட்டுவதற்கு தந்த அனுமதியை கேரள அரசு ரத்து செய்தது.
இந்நிலையில்,தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இருந்து கேரள அரசு தங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுக்கொண்டதை வேடிக்கை பார்த்தது போல,பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு ரத்து செய்ததை தி.மு.க அரசு வேடிக்கை பார்க்க போகிறதா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“முல்லைப் பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது.உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர்குழுவின் அறிவுறுத்தல் படி செய்யவேண்டிய இப்பணியை கேரளா தடுத்து நிறுத்துவது சரியானதல்ல.
மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கியதையே சாதனை போல அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இப்போது என்ன செய்யப் போகிறார்?,
தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இருந்து கேரள அரசு தன்னிச்சையாக தங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுக்கொண்டதை வேடிக்கை பார்த்தது போல இதையும் தி.மு.க அரசு வேடிக்கை பார்க்க போகிறதா?,
வெறுமனே கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களது கூட்டணி கட்சியைச் சேர்ந்த கேரள முதலமைச்சரை தமிழக அமைச்சர்களை அனுப்பி நேரடியாக சந்திக்க வைத்து முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர திரு.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…