ஊரடங்கு நீட்டிப்பதா..? தளர்வுகள் அளிப்பதா..?முதல்வர் இன்று ஆலோசனை..!
- ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பதா..? தளர்வுகள் அளிப்பதா..? என்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை.
தமிழகத்தில் கடந்த ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து, ஜூன்-14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.