ஆளுநர் மாளிகைக்கு சென்று வர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும் என தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்து அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர்.
ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, தவக உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்துள்ளது. நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் தாமதம் செய்வதை கண்டித்து இந்த தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளது.
ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம் ஆகியோரும், பாஜக சார்பில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், குஷ்பு ஆகியோரும், பாமக சார்பில் சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோரும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்து புறகணிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதால் தேனீர் செலவு மிச்சமாகும் என தெரிவித்து இருந்தார்.
இதற்கு ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து நவாஸ் கூறுகையில், பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று வர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் உரிமை பிரச்சினைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என மலினபடுத்தக்கூடாது என பதிலடி கொடுத்துள்ளார்.
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…