தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி சாத்தியமா? – கார்த்திக் சிதம்பரம்
தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி சாத்தியமா?
கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இது விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட, கடன் தள்ளுபடி 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், கார்த்திக் சிதம்பரம் அவர்கள், ‘தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி சாத்தியமா? விவசாயிகள் பெற்ற கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்கிறதா? அல்லது கடன் தொகையை அரசே திரும்பி செலுத்துகிறதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.