ஊழல் செய்வதில் எடப்பாடி அரசு முதலிடம் என திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் பெரியார் தெருவில் அதிமுகவை நிராகரிக்கிறோம் தலைப்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் எம்.பி. தயாநிதி மாறன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசிய தயாநிதி மாறன், 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு ஆதாரம் உள்ளது. ஊழல் செய்வதில் எடப்பாடி அரசு முதலிடம் என்று கூறிய அவர், அதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என குற்றசாட்டினார். நேரடி விவாதம் நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா என சவால் விடுத்துள்ளார். இன்னும் 4 மாதங்கள் தான். அதன் பின் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறினார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…