நாட்டின் விடுதலைக்காக எந்தப் பங்களிப்பையும் செய்யாதப் பின்புலத்தில் வந்த பாஜக, விடுதலைப்போராட்ட வீரர்களைப் புறக்கணிப்பு செய்வதா? – சீமான்

Published by
லீனா

நாட்டின் விடுதலைக்காக எந்தப் பங்களிப்பையும் செய்யாதப் பின்புலத்தில் வந்த பாஜக, விடுதலைப்போராட்ட வீரர்களைப் புறக்கணிப்பு செய்வதா? என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

குடியரசு தின அணிவகுப்பில் ‘கப்பலோட்டிய தமிழர்’ பாட்டன் வ.உ.சி., கு வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் ஆகியோாது உருவப்படங்கள் தாங்கிய அணிவகுப்புக்கு இடமில்லையெனும் பாஜக அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘குடியரசு தின அணிவகுப்பில் ‘கப்பலோட்டிய தமிழர்’ பாட்டன் வ.உ.சி., கு வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் ஆகியோாது உருவப்படங்கள் தாங்கிய அணிவகுப்புக்கு இடமில்லையெனும் பாஜக அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

நாட்டு விடுதலைக்காக, சுதேசிக்கப்பல் விட்டு, வெள்ளையர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி, அதற்குப் பரிசாக இரட்டை ஆயுள் தண்டனையைப் பெற்று, கொடும் சிறைவாசத்தை அனுபவித்து, தனது வாழ்வையே இழந்த தியாகச்சீலர் பாட்டன் வ.உ.சி.யையும், தாய் நிலத்தின் விடுதலைக்காக வெள்ளையர்களை எதிர்த்துச் சண்டையிட்டு, இழந்த நிலத்தை மீட்டெடுத்தப் பெரும்பாட்டி வேலுநாச்சியாரையும் புறக்கணிக்கும் பாஜக அரசின் செயல் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அவமதிக்கும் கொடுங்கோன்மையாகும். எந்தவொரு தேசிய இனத்தின் மக்களும் செய்திடாத அளவுக்கு இந்நாட்டின் விடுதலைக்காக அளப்பெரும் ஈகங்களைச் செய்து, வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்த தமிழ்ப்பேரினத்தைச் சார்ந்த முன்னோர்களைப் புறந்தள்ளுவது மன்னிக்கவே முடியாதப் பச்சைத்துரோகமாகும்.

நாடறியாது எனக்கூறி, எமது முன்னோர்களுக்குக் குடியரசு தின அணிவகுப்பில் இடமளிக்கப்படாதென்றால், அண்ணல் காந்தியடிகளையும், புரட்சியாளர் அம்பேத்கரையும்தான் தாண்டி எவருக்கு இடமளிக்க முடியும்? நாடறியப்படாதவர்களை அங்கீகரிக்க முடியாதென்றால், எதற்காக 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வல்லபாய் பட்டேலுக்குச் சிலை வைத்தார்கள்? குஜராத்தில் பிறந்த காந்தியைத்தானே நாடறியும்! அவருக்குத்தானே அவ்வளவு பெரிய
சிலை வைத்திருக்க வேண்டும்! அதற்கு மாறாக, வல்லபாய் பட்டேலுக்கு எதற்குச் சிலை வைத்தார்கள்? ஈகங்கள் செய்து அறியப்படாத தலைவர் பெருமக்களை அடையாளப்படுத்தி, வரலாற்றை மீட்டெடுத்து அங்கீகரிக்க வேண்டியதுதானே ஓர் அரசின் பொறுப்பும். கடமையும்! அதனைச் செய்யாது, தட்டிக்கழித்துவிட்டு முழுவதுமாக அவர்களை மறைத்து இருட்டடிப்பு செய்வது எந்தவிதத்தில் நியாயம்?

நாட்டின் விடுதலைக்காக எவ்விதப் பங்களிப்பையும் செய்யாது வெள்ளையர்களிடம் அடிபணிந்தப் பின்புலத்தில் தோன்றிய பாஜக, இந்நாட்டின் மீட்சிக்காக செக்கிழுத்து, சிறைப்பட்டு, வதைபட்டு, பொருளியல் வாழ்வை இழந்து, தனதுயிரையே ஈகம்செய்திட்ட தமிழ்த்தேசிய இனத்தைச் சார்ந்த முன்னோர்களை, விடுதலைப்போராட்ட வீரர்களை அடையாளப்படுத்த மறுப்பது தமிழர் விரோதப்போக்கின் உச்சமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்! இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்!

இதுமட்டுமல்லாது, கேரளாவைச் சேர்ந்த நாராயணகுரு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த “நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸ் என இந்நாட்டின் முதன்மைத் தலைவர் பெருமக்களையும் புறக்கணிப்பு செய்திருப்பது எதேச்சதிகாரப்போக்கும், அதிகாரத்திமிரும் கொண்டு பாஜக செய்யும் கொடும் அநீதியாகும். இவ்வாறு, தமிழர்களுக்கும், இன்ன பிற தேசிய இனங்களுக்குமெதிராக மோடி அரசு செய்யும் தொடர் அட்டூழியங்களுக்கு எதிர்விளைவாக, வரவிருக்கும் ஐந்து மாநிலச் சட்டமன்றத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள் என அறுதியிட்டுக் கூறுகிறேன்!’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!

அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…

30 minutes ago

அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்.. 10 பேர் பலி!

நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…

55 minutes ago

ரிலீஸ் தேதியுடன் வந்த ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…

57 minutes ago

மாதவன் பேமிலியுடன் ஜாலியான ட்ரிப்… துபாயில் புத்தாண்டு கொண்டாடிய நயன் – விக்கி!

துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…

2 hours ago

அண்ணா பல்கலை. விவகாரம் – அதிமுக கேவியட் மனு தாக்கல்!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…

3 hours ago

பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய விடாமுயற்சி! ரெட் ஜெயண்ட் போட்ட சூப்பர் பிளான்?

சென்னை :  அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…

4 hours ago