அதிமுக கூட்டணியில் உள்ளதா? ஹெச்.ராஜா விளக்கம்
அதிமுக இன்றுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.அதிமுக கூட்டணியில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது.ஆனால் பாஜகவிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுக இன்றுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது.இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.