11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?- பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை!

Published by
பாலா கலியமூர்த்தி

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை.

மத்திய அரசு தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தினாலும், அதனை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்து, தமிழகத்திற்கென தனி கல்வி கொள்கையை உருவாக்குவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தனி கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளிடம் கருத்து கேட்டு வருகிறது.

அந்தவகையில், இன்று அண்ணா பல்கலைக்கழத்தில் உள்ள வளாகத்தில் மாநில கல்விக்கொள்கை உருவாக்க கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி  முருகேசன் தலைமையில் குழு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை செய்து வருகிறது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

11-ஆம் பாடத்திட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை என்றும் கூறினார். இந்த கூட்டத்தில் பேசிய கல்வித்துறை அதிகாரிகள், யானை பசிக்கு சோளப்பொரி கதையாக பள்ளி கல்வி துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சிக்கு தன்னாட்சி அதிகாரம் இருப்பது போல் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் தேவை என்றுள்ளனர்.

நீட் தேர்வை வெறும் 10,000 மாணவர்கள் எழுதுகிறார்கள். இவர்களுக்காக 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஏற்றார்போல் பாடப்புத்தகம் எழுத வேண்டியிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் 13,000 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

3 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

5 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

5 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

6 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

6 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

6 hours ago