மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தாலே பேருந்தில் இலவசமாக பயணிக்க அறிவுறுத்தல் என அமைச்சர் பேட்டி.
தமிழ்நாட்டில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை வரவேற்ற பிறகு சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகளுக்கு வந்துள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் சிறப்பாக படித்தது போல், இந்த ஆண்டும் பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் படிக்க வேண்டும் என்றார். அரசுப்பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். தமிழகத்தில் 8,340 நடுநிலைப் பள்ளிகள், 3,547 உயர்நிலை மற்றும் 4221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று 46,22,324 மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர்.
மேலும், அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 1. 31 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். 6-12ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தாலே பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பேருந்து பயண அட்டை எப்போது வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறையுடன் ஆலோசித்து தெரிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பள்ளி பொதுத்தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை, 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்பாக மாநில கல்விக்கொள்கையில் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நீக்குவது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
உயர்கல்வி துறைக்கென தனி பாடம் கோட்னு வருவது குறித்து வரும் 15-ஆம் தேதி நாடாகும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். மாநில கல்வி கொள்கை குறித்து முழு அறிக்கை அளித்த பின் முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும், கோடை காலத்தையொட்டி வகுப்பறையில் நீர் இருப்பதை உறுதிப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு போட்டி தேர்வு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போரை தேர்வு இல்லாமல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்க கூடாது என தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டர்.
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…