‘இவ்வளவுதானா..!’… தம்பியின் மான நஷ்ட வழக்கை பார்த்து ஓடி ஒளியவா போகிறேன்? – அமைச்சர் மனோ தங்கராஜ்

manothangaraj

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அகலபாதாளத்தில் உள்ளது. அமுல் இந்தியாவின் முன்மாதிரியான நிறுவனம், ஆவின் கைக்கூலிகளின் நிறுவனம். மனோஜ் தங்கராஜ் அமைச்சர் என்பதால் மரியாதை கொடுத்து பேசுகிறேன். மனோஜ் தங்கராஜ்  அரசியலில் இருப்பது தமிழகத்திற்கு சாபக்கேடு. என்னால் நாவடக்கத்தை கட்டுப்படுத்த முடியாது.

அரசியல் கட்சிகளை பொறுத்தவரை அதிகமாக நல்லவர்கள் இருந்தால், நல்ல அரசியல். அதில், ஒருசில கெட்டவர்கள் இருந்தால் நீக்க வேண்டும் அல்லது ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இதனால், மெஜாரிட்டியை நோக்கி அனைவரும் செல்ல வேண்டும், இதுதான் நல்ல அரசியல், நல்ல அரசு என தெரிவித்தார்.

அமுல் இந்தியாவின் முன்மாதிரி.! ஆவின் கைக்கூலி… அண்ணாமலை கடும் தாக்கு.!

எந்த கட்சியும் புனிதமான, சுத்தமான கட்சி என்று என்னால்  ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் வழங்கமுடியாது. அமைச்சர் மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்க தொடர உள்ளேன் என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், இவ்வளவு தானா!!! தம்பி அண்ணாமலை, தாங்கள் கால்ச்சட்டை போடுவதற்கு முன்பே (1988) பேச்சிப்பாறை நீர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், கனிம வள பாதுகாப்பு போராட்டம் என எத்தனையோ மக்கள் பிரச்சனைகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் நான் ஏறி இறங்கிய வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தம்பியின் மான நஷ்ட வழக்கை பார்த்து ஓடி ஒளியவா போகிறேன்? ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டுகைக்கூலி என்று கூறுவது ஏனோ? என்று பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்