டாஸ்மாக் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா? – சீமான் கேள்வி
தமிழில் அர்ச்சனை என்பது பெயர் அளவிலேயே உள்ளது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றசாட்டு.
தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கஞ்சா, குட்கா, ஹெராயின் போன்றவை போதை பொருட்கள் என முருகன் ஆணையாக ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் டாஸ்மாக் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்பது பெயர் அளவிலேயே உள்ளது. கோயில்களில் தமிழ் வழிபாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். எங்கள் தாய்மொழி என்பது என்னுடைய உரிமை என்றும் கூறினார்.