டிஎன்பிஎஸ்சி தலைவராகிறாரா சைலேந்திரபாபு? வெளியான தகவல்!
டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்.
தமிழகத்தில் இரண்டு முக்கிய பொறுப்புகளில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் ஓய்வு பெற உள்ள நிலையில், யார் அந்த பொறுப்பை வகிக்க போகிறார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு வரும் 30 ஆம் தேதி பணிநிறைவு பெற இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது.
புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இதனால் விரைவில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பது உறுதியாகிவிடும். இதுபோன்று, தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு இந்த மாதம் 60வயது பூர்த்தி அடைவதை அடுத்து வரும் 30-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.
தமிழகத்தில் உச்சபட்ச அரசு பதவியாக கருதப்படும் தலைமை செயலாளர் பொறுப்புக்கு யார் என முதல்வர் ஆலோசனை நடத்தி இருந்தார். அந்த லிஸ்டில் 13 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. யுபிஎஸ்சி தேர்வு செய்து அனுப்பும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளில் இருந்து ஒருவரை தமிழக டிஜிபியாக தமிழக அரசு தேர்வு செய்யும். இதில், இம்மாதம் தான் டிஜிபி சைலேந்திர பாபுவும் ஓய்வு பெற உள்ளார் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இந்த நிலையில், டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிபி சைலேந்திரபாபு பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். குமாரி மாவட்டத்தை சேர்ந்த சைலேந்திரபாபு 2 ஆண்டுகளாக தமிழக காவல்துறை தலைவராக உள்ளார்.
இதனால், சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளுக்கான பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்து வருகிறது. ஏற்கனவே டிஜிபி பதவி வகித்த நட்ராஜும் ஓய்வுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் இருந்துள்ளார். எனவே, சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.