ஊழல் குறித்து நேருக்குநேர் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? அமைச்சர் செல்லூர் ராஜூ
ஊழல் குறித்து நேருக்குநேர் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நாங்குநேரி ரெட்டியார்பட்டியில் வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஊழல் குறித்து நேருக்குநேர் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என்று கேள்வி எழுப்பினார். சட்டம் – ஒழுங்கு சரியாக இருந்ததால்தான், ஸ்டாலின் நமக்கு நாமே நடைபயணம் நடந்தது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.