குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்தது.இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.குடியரசு தலைவர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த நிலையில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.நேற்று டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது .பின்னர் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.இதனை கண்டித்தும் பல இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மதத்தின் பெயரால் மக்களின் உயிரை பறிப்பது அரசின் சூழ்ச்சி.மக்களுக்கு எதிராக நடத்தப்படும் சூழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் வரை நான் ஓய மாட்டேன்.சமூகத்தை பொறுத்தவரை நானும் ஒரு மாணவன் தான். மாணவர்களுக்கு நடந்த அநீதிக்கு நானும் குரல் கொடுக்க வேண்டும்.
அதிகாரம் மக்களின் கையில் இருக்கும்வரைதான் அது ஜனநாயகம். பாகிஸ்தான் இந்துவுக்கு ஒரு நியாயம்? இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா ? என்றும் கேள்வி எழுப்பினார். மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவளித்தது தமிழினத்திற்கும் தேசத்திற்கும் செய்த துரோகம்.இது கட்சி , சாதியை எல்லாம் கடந்தது இந்த பிரச்சினை அதனால் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…