விடுதலையாகிறாரா சசிகலா ? பாஜக நிர்வாகி ட்வீட்
சசிகலா விடுதலையாக உள்ளதாக பாஜக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா,சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணையில்,ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு சிறைத்துறை இயக்குனர் மெக்ரித், சசிகலாவிற்கு நன்னடத்தை விதிமுறைகள் கிடையாது தண்டனை முழுவதும் அனுபவித்த பின்புதான் சசிகலா விடுதலை ஆவார் என கூறினார். இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில்,ஆகஸ்ட் 14-ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகலாம் என்று தெரிவித்துள்ளார்.இதனால் சமூக வலைத்தளங்களிலும் சசிகலா விடுதலையாகிறார் என்ற செய்திகள் உலாவந்து. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Now breaking:
Mrs. Sasikala Natarajan is likely to be released from Parapana Agrahara Central Jail, Bangalore on 14th August, 2020.
Wait for further update.
— Dr. Aseervatham Achary / முனைவர். ஆசீர் ஆச்சாரி (@AseerAchary) June 25, 2020