பேனா சின்னத்திற்கு அனுமதி கிடைக்குமா? – இன்று வெளியாகும் முடிவு !
மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான திட்டம் குறித்து மத்திய நிபுணர்கள் குழு இன்று பரிசீலினை.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைப்பது பற்றி இன்று முடிவெடுக்கிறது மத்திய சுற்றுசூழல் துறை. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நினைவாக ரூ.81 கோடியில் பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
8,550 சதுர மீட்டரில் பேனா நினைவு சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் மத்திய அரசின் சுற்றுசூழல் அமைச்சக நிபுணர்கள் குழு பரிசீலித்து பேனா சின்னம் பற்றி முடிவெடுக்கிறது. மத்திய சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு தனது இறுதி முடிவை இன்று எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பேனா நினைவு சின்னத்தின் வரைவு திட்டத்தை தமிழக பொதுப்பணித்துறை நிபுணர் குழுவுக்கு அனுப்பியிருந்தது. நிபுணர் குழுவின் தலைவர் தீபக் அருண் அப்டே தலைமையில் திட்டத்தின் விவரங்கள் குறித்து காணொளியில் ஆலோசனை நடத்த உள்ளனர். நிபுணர் குழுவின் ஆலோசனையில் தமிழக பொதுப்பணித்துறையி அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். தமிழக அரசின் கடலோர மேலாண்மை குழு நினைவு சின்னத்திற்கு ஏற்கனவே நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.