நாடாளுமன்றத்தின் முதல் பணியே குடியரசுத்தலைவரை அவமதிப்பதா? வெங்கடேசன் எம்.பி கண்டனம்.!
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத்தலைவர் அவமதிப்பு குறித்து வெங்கடேசன் எம்.பி கண்டனம்.
கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில், இந்த கட்டிடம் தற்பொழுது முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே மாதம் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும், என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தான் இதனை திறந்து வைக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் உட்பட 19 கட்சிகள், புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை எம்.பி வெங்கடேசன், இதனை கண்டித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு. இது வெறும் செங்கல் சிமிண்ட் இல்லை, ஜனநாயகத்தின் சின்னம் இந்த நாடாளுமன்றம் பிரதமரே..
புதிய நாடாளுமன்றத்தின் முதல் பணியே குடியரசுத்தலைவரை அவமதிப்பதா? எல்லாம் நான்தான் என்றால் நாட்டில் சட்டங்கள் எதற்கு? இது எதிர்க்கட்சிகளின் குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக பார்க்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.<
அரசியல் சாசன
சட்ட விதி 79 ஐ மதிக்க வேண்டாமா?புதிய
நாடாளுமன்றத்தின் முதல் பணியே குடியரசுத்தலைவரை அவமதிப்பதா?கட்டிடப்பணியை துவக்கும் பொழுதும், முடிக்கும் பொழுதும் சிங்கத்தின் கோரப்பற்களில் ஜனநாயக மாண்புகளின் குருதி படிவதா?
எல்லாம் நானே என்றால் நாட்டில் சட்டங்கள் எதற்கு? pic.twitter.com/gRL2BFJjSG
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 24, 2023
பெண் ஆதிவாசி குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் புறக்கணிப்பு
நாடாளுமன்றம் வெறும் செங்கல் சிமிண்ட் இல்லை பிரதமரே
ஜனநாயகத்தின் சின்னம்
19 எதிர்க் கட்சிகளின் கண்டனம் தேசத்தின் குரல். pic.twitter.com/2cmSPXmO5G
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 24, 2023
/p>