குருமூர்த்தி கம்யூனிஸ்டா? மோடி காங்கிரசா? – ஆளூர் ஷாநவாஸ்
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிட்டதில்லை என்கிறார் அண்ணாமலை என ஆளூர் ஷாநவாஸ் ட்விட்.
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்தார்.
அப்போது பேசிய அவர், இந்த ஒற்றை தலைமை பிரச்னை எதற்காக வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. கனவா, நனவா என்பது போல இருக்கு. பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன் என தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குருமூர்த்தி சொல்லித்தான் தர்மயுத்தம் நடத்தினேன் என்று சொன்ன OPS, மோடி சொல்லித்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றேன் என்று இன்று சொல்கிறார். ஆனால், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிட்டதில்லை என்கிறார் அண்ணாமலை. அப்படியெனில், குருமூர்த்தி கம்யூனிஸ்டா? மோடி காங்கிரசா?’ என பதிவிட்டுள்ளார்.
குருமூர்த்தி சொல்லித்தான் தர்மயுத்தம் நடத்தினேன் என்று சொன்ன OPS, மோடி சொல்லித்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றேன் என்று இன்று சொல்கிறார்.
ஆனால், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிட்டதில்லை என்கிறார் அண்ணாமலை.
அப்படியெனில், குருமூர்த்தி கம்யூனிஸ்டா?
மோடி காங்கிரசா?— Aloor Sha Navas (@aloor_ShaNavas) June 17, 2022