முதல்வர் வேட்பாளர் குறித்து சி.டி.ரவி கூறியது சரியா ? தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விளக்கம்

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என சி.டி.ரவி கூறியது சரியான கருத்துதான் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை மத்திய தலைமை தான் அறிவிக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.ஆனால் அதிமுக ஏற்கனவே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்த நிலையில், இவ்வாறு கூறிவந்தது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி கூறினார்.
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில்,அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என சி.டி.ரவி கூறியது சரியான கருத்துதான். திமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025