புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமம் சம்பவம் போல, நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள நீர் தேக்கதொட்டியில் நாய் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புதுக்கோட்டை எனும் கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கிறது. அங்கு உள்ள நீர்தேக்க தொட்டியில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வது வழக்கம்.
அப்படி சுத்தம் செய்ய செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தொட்டி முழுதாக காலியாக வைத்திருக்கபடும். இரண்டு நாட்கள் கழித்து அந்த தொட்டி மாநகராட்சி ஊழியர்களால் சுத்தம் செய்யப்படும். அப்படி மாநகராட்சி ஊழியர் நேற்று சுத்தம் செய்ய வந்துள்ளனர்.
அதன் நீர்த்தேக்க தொட்டியில் இறந்துபோன நாயின் சடலம் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி உள்ளனர். அதற்கு பிறகு காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டு, அவர்கள் வந்து இறந்து போன நாயின் சடலத்தை வீசிய மர்ம நபர்கள் யார் என்பதை விசாரணை செய்து வருகின்றனர். அந்த குடிநீர் தேக்க தொட்டி அமைந்துள்ள பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்று கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் தான் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் எனும் கிராமத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது ஒரு நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாக , அடுத்த ஒரு நிகழ்வு தற்போது மீண்டும் தமிழகத்தில் நிழழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விசாரணையினை தீவிரமாக நடத்தி குற்றவாளிகளை கண்டறிவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…