சேரி மக்களிடம் ஓட்டு கேட்கும் போது மட்டும் இனித்ததா?- குஷ்புவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எச்சரிக்கை!

tamilnadu congress

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. இதில், குறிப்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே, மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என திமுக ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. பட்டியல் சமூக மக்களை அவமதிக்கும் வகையில் நடிகை குஷ்பூ பேசியிருப்பதாக கூறி, சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, சேரி மொழி என்று பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையான நிலையில், நடிகை குஷ்பூ அதற்கு விளக்கமும் அளித்துள்ளார். அதில், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என விளக்கம் அளித்திருந்தார்.

மகளிர் உரிமைத் தொகை.. தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் SMS.. அரசு அதிகாரிகள் தகவல்!

இந்த நிலையில், ‘சேரி மொழி’ என கூறி பட்டியல் சமூக மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நடிகை குஷ்பூவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து அவருடன் லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் அநாகரிகமான கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும், தேசிய மகளிர் ஆணையமும் தனது எதிர்ப்பை தெரிவித்தன.

திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.  சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பூ அவமதித்துள்ளார். பாஜகவினருக்கு உரித்தான சாதிய மனோபாவத்தை விஷமாக கக்கியிருக்கிறார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற எலும்புத்துண்டுக்காக எப்படி வேண்டுமானால் பேசலாம் என்று நினைக்கிறாரா குஷ்பூ. குஷ்பூவுக்கு மகளிர் நலன் மீது எல்லாம் சிறிதளவும் அக்கறை கிடையாது. தன் பதவி தக்க வைக்க வேண்டும் என்பது தான் குஷ்பூவின் நோக்கம். சேரி மக்களிடம் ஓட்டு கேட்கும் போது மட்டும் இனித்ததா? மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும் கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், பூசி மொழுகும் வேலையை செய்ய தொடங்கியிருக்கிறார்.

திருவிழாவான மதுரை..! கள்ளழகர் கோயிலுக்கு பக்தர்கள் புடைசூழ மகாகும்பாபிஷேக விழா.!

சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்ச் மொழியில் அன்பு என்று அர்த்தமாம். அதை தான் பயன்படுத்தினாராம். திமுக ஆதரவாளர் ஒருவரின் எக்ஸ் தள பதிவுக்கு பதில் அளித்த குஷ்பு. சேரி மொழி என்று அப்பட்டமாக திட்டினார். அதோடு முதல்வரை சுற்றி இதுபோன்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இது தான் அன்பை வெளிப்படுத்தும் சொல்லா? யாரை ஏமாற்ற குஷ்பூ கபட நாடகமாடுகிறார்? இப்போது கூட தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை. சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்பூவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? குஷ்பூவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது.

தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பூ நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறையின் மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்