தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவர் லோன் கேட்டுச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வங்கி மேலாளர், இந்தி தெரியுமா? என்று கேள்வி கேட்டார்.இதற்கு அந்த மருத்துவர் , “இந்தி தெரியாது’’ என்று கூறினார்.இதனால் “லோன் கிடையாது’’ என்று வங்கி மேலாளர் அந்த மருத்துவரை திருப்பி அனுப்பியுள்ளார் .இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவில், ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ‘இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது’ என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி.
இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பாஜக அரசின் பின்புலம் இதற்குக் காரணமா?
எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள். சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு,எச்சரிக்கை என்று பதிவிட்டுள்ளார்.
https://www.facebook.com/MKStalin/photos/a.343238919169318/1744061212420408/
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
விண்ணிலிருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்.! பிரிந்து சென்றது க்ரூ டிராகன் விண்கலம்!
March 18, 2025
தொடங்கியது பூமிக்கு திரும்பும் இறுதிகட்ட பணிகள்… சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்?
March 18, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!
March 18, 2025