சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுவது சாத்தியமா? மத்திய அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது.இதற்கிடையில் புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுசூழல் வரைவு அறிக்கைக்கு தடை கோரி மீனவர் நல சங்கம் சார்பில் செல்வராஜ் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில், பிராந்திய மொழிகளான தமிழ் உள்ளிட்டவைகளில் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை வெளியிடும் வரை தடை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுற்றுசூழல் வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.மேலும் இது தெடர்பாக இன்றைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கினை இன்று ஒத்திவைத்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துவிட்டது.மேலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட முடியுமா?” என்று கேள்வி எழுப்பியது .மேலும் “சாத்தியக்கூறு உள்ளதா என ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…