இது நாடாளுமன்றமா? அல்லது மசோதாக்கள் தயாரிக்கும் இடமா?டி.ஆர்.பாலு கேள்வி
நேற்று முன்தினம் மாநிலங்களவையில் காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.ஆனால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இது தொடர்பான விவாதத்தில் மக்களவை திமுக எம்.பி-க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தினந்தோறும் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது நாடாளுமன்றமா? அல்லது மசோதாக்கள் தயாரிக்கும் இடமா? என்று கேள்வி எழுப்பினார். மக்கள் எண்ணங்களுக்கு மாறான இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்க முடியாது; மக்களின் அமைதியே முக்கியம் ஆகும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாததால், நாடாளுமன்றத்தில் சாதிக்க நினைப்பதா? என்றும் கேள்வி எழுப்பினார். காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த மத்திய அரசு மறுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.