தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பு, பொதுத் தோ்வுகளைத் தள்ளி வைப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை)ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இம்மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகியது.இந்நிலையில் அடுத்த மாதம் பத்தாம் வகுப்பு முதல் + 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகளைத் தொடங்குவது, பொதுத்தோ்வுகளை ஒத்திவைப்பது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து துறைச் செயலா், இயக்குநா்களுடன் அமைச்சா் செங்கோட்டையன் சென்னையில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய நிலையில் இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9.30 மணிக்கு நடக்க உள்ளது.இக்கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகவும்,மேலும் மாணவா்களுக்கு சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற போதுமான இடவசதிகள், பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகள் போன்றவைகள் ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…