“பிரதமரின் திட்டத்தை மக்களிடம் சொல்வதற்க்கு தடையா?” – வானதி சீனிவாசன்…!
பிரதமரின் திட்டத்தை மக்களிடம் சொல்வதற்க்கு தடையா? என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக,’பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அதன்படி,கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திட்டத்தின் கீழ்,ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு உணவு தானியங்கள் (அரிசி அல்லது கோதுமை) கூடுதலாக 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது. மேலும்,இந்த திட்டத்தை தீபாவளி 2021 வரை மத்திய நீட்டித்துள்ளது.
இந்நிலையில்,பிரதமரின் கரீஃப் கல்யான் யோஜனா திட்டத்தினை விளக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த பேனரை தமிழக காவல்துறை நீக்கி விட்டது.இதனால், பிரதமரின் திட்டத்தை மக்களிடம் சொல்வதற்க்கு தடையா? என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“பிபிஎல் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.அந்த வகையில்,கோயம்புத்தூரில் இதை விளக்கும் பி.டி.எஸ் கடைக்கு அருகில் ஒரு பேனரைக் கட்டினோம்,ஆனால்,தமிழக காவல்துறை அதை விதிக்கு எதிரானது என்று கூறி பேனரை நீக்கியது.பிரதமரின் திட்டத்தை மக்களிடம் சொல்வதற்க்கு தடையா?”,என்று பதிவிட்டுள்ளார்.
Sh @narendramodi ji is announced 5 kg free rice / wheat to each person under BPL .
In coimbatore we tied a banner near PDS shop explaining this , TN police is removing it by saying its against rule .
பிரதமரின் திட்டத்தை மக்களிடம் சொல்வதற்க்கு தடையா? @mkstalin@BJP4TamilNadu pic.twitter.com/YM2GAOO5yX— Vanathi Srinivasan (@VanathiBJP) July 3, 2021