மத்திய அரசு உத்தரவை மீறி இ-பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறலா?
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோன அவைரஸின் தீவிர பரவலை தடுக்க, மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றோரு மாவட்டத்திற்கு செல்ல இபாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம், மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், மத்திய அரசு இ-பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அளித்துள்ளது. மக்கள் சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் வண்ணமாக, இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மாணவர்கள் அட்மிஷனுக்கு செல்லவும், சொந்த ஊருக்கு செல்லவும் பணி நிமித்தமாக சொந்த ஊரிலிருந்து வேறு இடங்களுக்கு செல்லவும் மக்கள் சிரம படுகின்றனர். இதில் மனித உரிமை மீறல் இல்லையா என தமிழகம் அரசிடம் விளக்கம் கேட்டு, இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.’ என கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், மத்திய அரசு உத்தரவை மீறி இ-பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறலா? என 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, தலைமை செயலருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…