உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா ?பிரேமலதா விளக்கம்
அதிமுகவுடன் உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம், பெரிய மாற்றம் ஏற்படவில்லை.அதிமுகவுடன் உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக கூட்டணி தொடரும். தண்ணீர் பிரச்சனைக்கு நதிநீர் இணைப்புதான் ஒரே தீர்வு, இது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவோம்.
தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகளிடம் தேமுதிக கோரிக்கை வைக்கும்.மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. மற்ற மொழிகளை கற்று கொள்வதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.