முடி முக்கியமா உயிர் முக்கியமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.
மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மைதானத்தில், நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதல்வர், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதே நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டம் என்பதன் முதனமை நோக்கம் என்றார்.
விபத்துக்கு மிக முக்கியமான காரணம் வேகம் தான். சாலையில் வாகனத்தை ஓட்டும் போது வேகத்தை குறைத்து, உங்களது உழைப்பில் வேகத்தை செயல்படுத்துங்கள். இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும். சிலர் ஹெல்மெட் வாங்கி, பைக் முன்னாடி வச்சிட்டு போலீஸ பார்த்ததும் எடுத்து தலையில மாட்டுறாங்க, முடி முக்கியமா உயிர் முக்கியமா என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறிய வார்த்தைகளை எடுத்துரைத்தார்.
பிள்ளைகள் கேட்கிறார்கள் என்பதற்காக விலை உயர்ந்த பைக்குகளை வாங்கிக் கொடுத்து, பிள்ளைகள் இழந்த பெற்றோர்களையும் நாம் பார்க்கிறோம். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கி தருவதில் கவமான இருக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
மேலும், அனைவரும் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலமாக தனிமனிதனின் சமூக பண்பாடு, ஒழுக்கம் வெளிப்படுகிறது என குறிப்பிட்டார். எனவே இந்த திட்டத்திற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.