மக்களின் வரிப்பணத்தில் முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? – மு.க.ஸ்டாலின்
10 ஆண்டுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்தும் வெத்து வெட்டு என்றும் வீண் விளம்பரம் எனவும் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நூற்றுக்கணக்கில் ஒப்பந்தங்கள், கோடிகளில் முதலீடுகள் என பொய் பேசும் முதல்வர் பழனிசாமி முகமூடியை கழற்றி வீசியிருக்கிறது. அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் பெற்ற முதலீடுகள் ஆண்டுக்கு ரூ,1,800 கோடி என்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது என கூறியுள்ளார்.
வெத்து வேட்டுகளின் சாயம் வெளுக்கிறது என்றும் அறிவிக்கப்பட்ட முதலீடான ரூ.1.90 லட்சம் கோடியில் பெற்றது வெறும் 9.4% மட்டும்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். முதலீடுகள் பற்றி முதல்வர் பழனிசாமி கூறிய பொய்யின் சாயம் வெளித்துவிட்டது என விமர்சித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தில் முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நூற்றுக்கணக்கில் ஒப்பந்தங்கள், கோடிகளில் முதலீடுகள் என பொய் பேசும் @CMOTamilNadu முகமூடியை @timesofindia கழற்றி வீசியிருக்கிறது.
அறிவிக்கப்பட்டவற்றில் முதலீடாகப் பெற்றது வெறும் 9.4%
வெத்து வேட்டுகளின் சாயம் வெளுக்கிறது!
மக்களின் வரிப்பணத்தில் முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? pic.twitter.com/dPYsg2ae2D
— M.K.Stalin (@mkstalin) December 29, 2020