ஒரு நாகரிகமான சமுதாயத்தில் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவம் நடைபெறுவது ஏற்புடையதா? என மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில், தூத்துக்குடியில் எந்தவித ஆயுதமும் இன்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
ஒரு நாகரிகமான சமுதாயத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறுவது ஏற்புடையதா? எனவும் கேள்வி எழுப்பினர். துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவு அறிக்கையையும், துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த தமிழக முதன்மை செயலாளர் அறிக்கையையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது , போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…