சமூக நீதி குறித்து திமுக பேசுவதா ? தமிழக பாஜக தலைவர் முருகன்.
சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை என்று தமிழக பாஜக தலைவர் எல் .முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல் .முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், அம்பேத்கரை போற்றும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்படுவது .சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை.கந்த சஷ்டி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தாமதமாக கருத்து தெரிவித்து உள்ளார் .கறுப்பர் கூட்டத்திற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. கந்த சஷ்டி கவச விவகாரத்தில் ரஜினி, சரத்குமாரை தவிர மற்றவர்கள் கருத்து கூறாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.