கொரோனா அச்சமா ? கண்டிப்பாக இவற்றை செய்யுங்கள்
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு என்பது உலக அளவில் சவாலாக உள்ளது.ஆனால் கொரோனா காரணமாக பலரும் அச்சமடைந்து உள்ளனர்.எனவே கொரோனாவை தடுப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்.
அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலமாக நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.கொரோனா ஒரு பேரிடர்.இந்த பேரிடலிருந்து நம்மை நாமே சமூக விலகலை கடைபிடித்து காத்துக்கொள்ள வேண்டும்.நாம் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தாலோ , பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பிலிருந்தாலோ நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.14 நாட்கள் நம்மை நாமே தனிமை படுத்தி கொள்ளும்போது அது மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கு நாம் உதவுகிறோம்.உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியில் நடமாடினால் அதை உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
எந்த அறிகுறியும் இல்லாமல் கூட உங்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே பொது மக்கள் அதிகமாக கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.தேவை இல்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும்.குழந்தைகளையும் 60-வயதுக்கு மேற்பட்டவர்களையும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.சர்க்கரை நோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்குள்ளானவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் .