காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியா? நாம் தமிழர் கட்சி மூன்றாவது பெரிய கட்சியா? – கே.எஸ்.அழகிரி

Default Image

தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கும் பின்னாலே இருக்கிற மர்ம ரகசியத்தை இளைஞர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். 

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள், காங்கிரஸ் கட்சி மட்டுமே தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி என்றும், சீமானும் கமலும் தோல்வியடைந்தவர்கள். நாம் தமிழர் கட்சி, 3-வது பெரிய கட்சி என்று சொல்வதற்கு எந்த தகுதியும் அவர்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கும் பின்னாலே இருக்கிற மர்ம ரகசியத்தை இளைஞர்கள் விரைவில் புரிந்து கொண்டு, தெளிவு பெறுவார்கள். 25 இடங்களில் போட்டியிட்டு, 18 இடங்களில் 72 சதவிகித வெற்றி பெற்று, ஒரு தொகுதியில் 80 ஆயிரம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியா ? ஒரு தொகுதியில் சராசரியாக 13 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வாங்கிய நாம் தமிழர் கட்சி மூன்றாவது பெரிய கட்சியா?

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் சராசரியாக வாங்கிய வாக்குகளின் அடிப்படையிலும் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும், மக்கள் நீதிமய்யம் கட்சியாக இருந்தாலும் 1 சட்டமன்றத் தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை என்றால் தாங்கள் செல்கிற அரசியல்பாதை குறித்து மறு சிந்தனை செய்ய வேண்டுமே தவிர, புதிய வியாக்கியானங்களை வழங்கி தங்களை 3வது பெரிய கட்சி என அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைக்கும் ஜீவனுள்ள இயக்கமாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.’

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்