தமிழகத்தில் சென்னை மட்டும் தான் இருக்கிறதா…! டெல்டா மாவட்டங்கள் இல்லையா…!கஜா புயல் பாதிப்பால் ஏங்கும் டெல்டாவாசிகள்…!
சென்னையில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு உதவியவர்கள் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பிற்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாடே சென்னையின் வர்தா, சென்னையில் வெள்ளம் என்ற போதெல்லாம் களங்கியது. லாரி லாரியாக பொருட்களும் ஆட்களும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து சென்னையை நோக்கி சென்றது.
குறிப்பாக நாகையில் இருந்து லாரியில் படகுகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.அதேபோல் சமூக வலைத்தளங்களில் சென்னையை மீட்கக்கூறி ஹேஸ்டேக்குகள் அனலாக பறந்தது.அதேபோல் மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லை. தமிழகம் கைகோர்த்து நின்றதை உலகமே கண்டு வியந்தது.
அதேபோல் தமிழகத்தில் நேற்று வந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களை ஒரு வழி செய்தது.குறிப்பாக இயற்கை வளங்கள் செழிப்பாக உள்ள மாவட்டங்கள் சிதைந்து கிடக்கிறது.தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் சேதங்கள் பல…
வீடுகளை இழந்தும் ,தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தும் இந்த மாவட்ட மக்கள் இருந்து வருகின்றனர்.பல உயிரிழப்புகளும்,பலர் காயமடைந்தும் உள்ளனர்.
இவர்களின் கண்ணீர் குரலை கேட்கவும் உதவிக்கரம் நீட்டவும் யாரும் இல்லாமல் தனிமையில் இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.