கருப்பாக இருப்பதால் கருப்பு திராவிடனா? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதுக்குன்னு அதுவும் திராவிடரா? என சீமான் கேள்வி.
நேற்று இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன் என்று பதிவிட்டு இருந்தது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், யுவன் அண்ணா கருப்பு சட்டை அணிந்து கருப்பு திராவிடர் என்று தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். என்னைவிட கருப்பு தமிழன் கருப்பு திராவிடன் யாரும் இல்லை. அவரை விட நான் கருப்பு. அவர் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு. இதுபோன்ற கேள்விகளுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் கருத்து குறித்து பதிலளித்த சீமான் அவர்கள், ‘யுவன் தம்பிக்கு நான் ஒன்னு சொல்லிக்கிறேன். முதலில் நீ தெளிவாக இரு. கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என்று சொல்லுகிறீர்கள். உனக்கு ரெண்டு அடையாளம் இல்லை. ஒன்னு திராவிடனாக இரு, இல்லையென்றால் தமிழனாக இரு. தம்பி குழம்பாமல் இருங்கள். யுவன் சின்ன பிள்ளை அவருக்கு தெரியவில்லை. அதனால் அதை விட்டுவிடுங்கள். கருப்பாக இருப்பதால் கருப்பு திராவிடனா? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதுக்குன்னு அதுவும் திராவிடரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…