மக்களின் கேள்விகளை பாஜக திசை திருப்புகிறதா? நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி.!
நடிகை காயத்ரி ரகுராம் அடிக்கடி தனக்கு தோன்றும் கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது, தனது தற்போது பெரிதளவில் பேசப்பட்டு வரும் ஸ்டெர்லைட் பிரச்னை, மற்றும் கலாக்ஷேத்ரா மாணவர்கள் பிரச்னை பற்றி டிவிட் செய்துள்ளார்.
இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது ” ஸ்டெர்லைட் பிரச்னை, கலாக்ஷேத்ரா மாணவர்கள் பிரச்னை, அதானி பிரச்னை, போலி நிறுவனங்கள் பிரச்னை என பாஜக அமைதியாக இருக்கிறது.அல்லது மக்களின் கேள்விகளை பாஜக திசை திருப்புகிறதா.?” என பதிவிட்டுள்ளார்.
அவருடைய பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், காயத்ரி ரகுராம் பாஜக கட்சியில் இருந்து விலகிய திலிருந்து மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு பரப்புவதோடு, வன்முறையைத் தூண்டும் வகையில் தவறான கருத்துகள் பரப்புவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மீது பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.