ரஜினி கட்சி தொடங்கியதன் பின்னணியில் பாஜகவா ? வானதி சீனிவாசன் விளக்கம்

Default Image

ரஜினி கட்சி தொடங்கியதன் பின்னணியில் பாஜக உள்ளதாக செய்திகள் அதிகம் உலாவி வந்த நிலையில் ,பின்னணியில் பாஜக இல்லை  என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.ஆனால் பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார்.எனவே ரஜினி கட்சி தொடங்கியதன் பின்னணியில் பாஜக உள்ளதாக செய்திகள் அதிகம் உலவி வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில்,எந்த ஒரு கட்சி உதயமாவதற்கும் முன்னணி, பின்னணியில் பாஜக இல்லை  என்று தெரிவித்துள்ளார்.பாஜக தென் தமிழகத்தில் பெரும் கட்சியாக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்