ரஜினியை தொடர்ந்து அரசியலில் குதிக்கிறாரா நடிகர் விஷால்?

ரஜினியை தொடர்ந்து வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 ல் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்சி பணியில் தீவிரம்காட்டி வரும் ரஜினி மக்கள் மன்றம், தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயுத்தமாகி வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷால் வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025