இவரைப் போன்ற பொறுப்பற்றவர்களின் பதவிகள் பறிக்கப்படவேண்டும் – மநீம

இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இவரைப் போன்ற பொறுப்பற்றவர்களின் பதவிகள் பறிக்கப்படவேண்டும் என மக்கள் நீதி மய்யம் ட்வீட்.
உத்திரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும். நீங்கள் ஹிந்தியை நேசிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புடையவர். நாங்கள் பிராந்திய மொழிகளை மதிக்கிறோம், ஆனால் இந்த நாடு ஒன்றுதான், இந்தியா ‘இந்துஸ்தான்’ அதாவது இந்தி பேசுபவர்களுக்கான இடம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. எனவே, இந்துஸ்தான் இந்தி பேசாதவர்களுக்கு ஏற்ற இடமல்ல, அவர்கள் இந்த நாட்டை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம், ‘இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியுள்ளார். இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இவரைப் போன்ற பொறுப்பற்றவர்களின் பதவிகள் பறிக்கப்படவேண்டும். மொழிப்பிரிவினையை தூண்டி பொது அமைதியை குலைக்கமுற்படுவதால் குற்றநடவடிக்கையும் தேவை!’ என தெரிவித்துள்ளனர்.
இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியுள்ளார். இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இவரைப் போன்ற பொறுப்பற்றவர்களின் பதவிகள் பறிக்கப்படவேண்டும். மொழிப்பிரிவினையை தூண்டி பொது அமைதியை குலைக்கமுற்படுவதால் குற்றநடவடிக்கையும் தேவை!
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 29, 2022