ஈடு செய்ய முடியாத பேரிழப்பு… எழுத்தாளர் ராஜ் கௌதமன் காலமானார்.!
அவரது மறைவிற்கு இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய வரலாற்று ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்தார்.
இவர் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி நகரில் பிறந்தார். எழுத்தாளர் ஏ மாதவியாவின் ஆராய்ச்சியின் அடிப்படையில் அவர் தனது முனைவர் பட்டத்தை பெற்று கொண்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை தனது எழுத்து மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர். ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே நவீன முறையை கையாண்டவர்.
பழங்காலத்திலிருந்து தற்காலம் வரையிலான தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு ஆய்வு செய்யும் இருபது ஆய்வுப் படைப்புகளை அவர் எழுதியுள்ளார். தற்பொழுது, அவரது மறைவிற்கு இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“ஒரு தலைசிறந்த எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு” என கூறி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறிஞர் ராஜ்கௌதமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே நவீன முறையை கையாண்டவர், தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். தலித் திறனாய்வு முறையியல் உருவான போது அதன் முதன்மை முகமாய்… pic.twitter.com/kxkY1GBwW6
— pa.ranjith (@beemji) November 13, 2024
தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறிஞர் ராஜ்கௌதமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.@beemji @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamBooks #RajGowthaman pic.twitter.com/Nnuv6MiMpl
— Neelam Social (@NeelamSocial) November 13, 2024
தமிழ் இலக்கியப் பண்பாட்டுச் சூழலின் வரலாற்றுப்பார்வையை மறு கட்டமைப்பு செய்த ஆய்வாளர் – விருதை மாவட்டம் தந்த தலைசிறந்த எழுத்தாளர் ராஜ் கௌதமன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து துயருற்றேன்.
அவரின் மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு. இத்துயர்மிகு சூழலில் அவரது… pic.twitter.com/cJCF2vv2AE
— Thangam Thenarasu (@TThenarasu) November 13, 2024