‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ – முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்து ட்வீட்..!

Default Image

குன்னூர் அருகே நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத், திருமதி மதுலிகா ராவத் மற்றும் 11 ஆயுதப்படை வீரர்களின் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் என முதல்வர் ட்வீட். 

ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘குன்னூர் அருகே நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத், திருமதி மதுலிகா ராவத் மற்றும் 11 ஆயுதப்படை வீரர்களின் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பில் தேசத்துடன் இணைந்து இரங்கல் தெரிவிப்பதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சையில் இருக்கும்  கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.’ என  படத்திவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்