தெர்மல் ஸ்கேனரில் முறைகேடா..? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்.!

தமிழக அரசு தெர்மல் ஸ்கேனரை அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும், வாங்கப்பட்ட தெர்மல் ஸ்கேனர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும், தெர்மல் ஸ்கேனர் வாங்கியது தொடர்பான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக சென்னை மாநகராட்சி மீது திமுக தலைவர் ஸ்டாலின் பழி போடுவதாக குறிப்பிட்டார். தெர்மல் ஸ்கேனர் கருவிகள் தலா ரூ.1,765 யுடன் 18% ஜிஎஸ்டி வரியுடன் மட்டுமே வாங்கப்பட்டது.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகில் முதன் முறையாக வீடுகள் தோறும் கொரோனா அறிகுறிகள் உள்ளனவா..? என கண்டறியும் திட்டத்தை சென்னை மாநகராட்சி தான் செயல்படுத்தி வருகிறது என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025