அனைத்து ரேஷன் கடைகளில் விரைவில் கருவிழி பதிவு.!

Ration shop

சென்னை : தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரியாக தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடியவில்லை. இதனால், விரல் ரேகை மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக, கருவிழி பதிவு மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 90% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து கடைகளிலும் கொண்டுவரப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேலாக புதிய கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புதிய ரேஷன் கார்டு கேட்டு 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்து நீண்ட நாள்களாக காத்திருப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்