இர்பான் விவகாரம் : 10 நாட்கள் மருத்துவமனைக்கு தடை! டிஎம்எஸ் நடவடிக்கை!
யூட்யூபர் இர்பான் விவகாரத்தில் சம்பத்தப்பட்ட மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க 10 நாட்கள் தடைவிதித்து நடவடிக்கை எடுத்துள்ளது டிஎம்எஸ்.
சென்னை : யூட்யூபர் இர்பான் சமீபத்தில், அவரது மனைவியின் பிரசவத்தின் போது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை கதிரிகோலால் வெட்டிய வீடியோவை அவரது சேனலில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்ட நிலையில் தற்போது சம்பத்தப்பட்ட ரெயின்போ மருத்துவமனைக்கு 10 நாட்கள் தடை விதித்தும், ரூ.50,000 அபராதமும் விதித்து டிஎம்எஸ் (DMS) நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் சிகிச்சை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி, அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் 10 நாட்களுக்கு தடை விதித்துள்ளது டிஎம்எஸ்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட, அவர் குழந்தையின் தொப்புள் கொடியை அறுக்கும் வீடியோவானது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. இந்த விவகாரம் தொடர்பாக, இர்பான் மீதும் அந்த மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுப்பது உறுதி என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது அந்த தனியார் மருத்துவமனையான ரெயின்போ மருத்துவமனையின் மீது இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.