புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு!ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேருக்கு சிறை!
புதுக்கோட்டை நீதிமன்றம், ஹெராயின் போதை பொருள் கடத்திய வழக்கில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
முகமது ஜுபூரலி மற்றும் மசூத்மசாபி இருவரும் ஈரானைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2013ம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த நவ்சத் அத்தார் உள்ளிட்ட 3 பேருடன் இணைந்து ஹெராயின் போதைப் பொருள் தயாரித்துள்ளனர்.
இவர்கள் 5 பேரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மாவட்ட கூடுதல் பண்டக அத்தியாவசிய சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிங்ஸ்லி, 5 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.