இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் ஐ.பி.எல். போட்டிக்கான எதிர்ப்பு குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஐ.பி.எல். போட்டிகளை சென்னையில் நடத்துவதா, வேண்டாமா? என்பதை கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
‘ஐ.பி.எல். போட்டிகளை நடத்தாமல் இருந்தால் நல்லது. போட்டி நடந்தால் அதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும். போட்டிகளை புறக்கணிப்பது குறித்து ரசிகர்கள் முடிவு செய்யட்டும். போட்டியை நிறுத்த யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு முன் , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக்கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். போட்டிகளை நடத்தினால் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சென்னையில் நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டியை நிறுத்த மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் திட்டமிட்டபடி நாளை சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. எனவே, நாளை போட்டி தொடங்கும்போது சேப்பாக்கத்தில் போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், சீனா,…
சென்னை : இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து…
லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை…
கர்நாடகா : 2025-26 ஆம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டிற்காக மொத்தம் ரூ. 4.095 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில். கர்நாடக…